பாங்காக்கில் நடந்த மிஸ் யூனிவர்ஸ் அழகிப் போட்டியில் மெக்சிகோவை சேர்ந்த பாத்திமா போஷ் ((FATIMA BOSCH))மகுடம் சூட்டிக் கொண்டார். 74 ஆவது மிஸ் பிரபஞ்சமாக தேர்வு செய்யப்பட்ட அவருக்கு கடந்த ஆண்டின் மிஸ் யூனிவர்ஸ் அழகியான விக்டோரியா தெயில்விக் ((Victoria Theilvig)) பலத்த ஆரவாரத்திற்கு இடையே கிரீடத்தை சூட்டினார்.
25 வயதான பாத்திமா கடந்த செப்டம்பரில் மிஸ் யூனிவர்ஸ் மெக்சிகோ பட்டத்தை வென்று இந்த பிரபஞ்ச அழகிப் போட்டிக்கு தகுதி பெற்றார். மெக்சிகோவின் தபாஸ்கோ மாநிலத்தை சேர்ந்த இவர் விலங்கு நல ஆர்வலராகவும் இருக்கிறார். பேஷன் மற்றும் ஆடை வடிவமைப்பு கலைகளை கற்ற பின்னர் இத்தாலியில் குடியேறினார்.