செங்கடலில் பாப் எல் மண்டேப் ஜலசந்தி அருகே அல் பதா என்ற சரக்கு கப்பல் மூழ்கியதாகவும், அக்கப்பலில் இருந்த 2 இந்திய மாலுமிகள் மீட்கப்பட்டதாகவும், கென்யாவில் உள்ள இந்திய துாதரகம் தெரிவித்துள்ளது.
மேலும், மாயமான மற்றொரு மாலுமியை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளது. அதேபோல, ஹோர்முஸ் ஜலசந்தியில் பனாமா நாட்டு கொடியுடன் சென்ற எரிவாயு கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதிலிருந்த 24 இந்திய மாலுமிகள் மீட்கப்பட்டதாகவும், ஒருவர் மாயமாகியுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.