எஃகு &வாகனங்கள் மீதான வரிகளை குறைக்க பேச்சுவார்த்தை வர்த்தகப் போருக்கு மத்தியில் அமெரிக்கா- கனடா பேச்சுவார்த்தை
அமெரிக்கா மற்றும் கனடா இடையே நிலவி வரும் கடுமையான வர்த்தகப் போருக்கு மத்தியில், எஃகு மற்றும் வாகனங்கள் மீதான வரிகளைத் தளர்த்துவது குறித்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
அமெரிக்காவில் நவம்பர் 3-ஆம் தேதி இடைக்காலத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எல்லைப் பகுதி மாநிலங்களில் உள்ள குடியரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு கனடாவுடனான வர்த்தகப் போர் அரசியல் ரீதியாகப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கருதப்படுகிறது.
இதனால் தேர்தலுக்கு முன்பாகவே ஒரு குறுகிய கால ஒப்பந்தத்தை எட்ட அமெரிக்கா விரும்புவதாகக் கூறப்படுகிறது.