தன்னை கம்யூனிஸ்ட் பைத்தியம் என விமர்சித்திருந்த அமெரிக்க அதிபர் டிரம்பை, இந்திய வம்சாவளி இளைஞரும் நியூயார்க் மேயருமான மம்தானி வெள்ளை மாளிகையில் நாளை சந்திக்க உள்ளார். அண்மையில் நடந்து முடிந்த நியூயார்க் நகர மேயர் தேர்தலில் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளரான சோரன் மம்தானி வெற்றி பெற்று, நியூயார்க் மேயரானார். மேயர் வேட்பாளராக மம்தானி பெயரை ஜனநாயகக் கட்சி அறிவித்ததிலிருந்து, அவரை டிரம்ப் கடுமையாக விமர்சித்து வந்தார். ஆனால், மம்தானி மேயராகத் தேர்வான பிறகு, அவரைச் சந்திக்கத் தயாராக இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார். மம்தானியும் ட்ரம்ப்பைச் சந்திக்க நேரம் கேட்டிருந்த நிலையில் நாளை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.