36 
உலகம்

நீரவ் மோடியின் ஜாமீன் மனு பத்தாவது முறையாக தள்ளுபடி.. நீரவ் மோடிக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மீண்டும் மறுப்பு

வங்கிக் கடன் மோசடி வழக்கில் கைதான வைர வியாபாரி நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை, பிரிட்டன் நீதிமன்றம் 10வது முறையாக தள்ளுபடி செய்துள்ளது.

Srini Vasan

வங்கிக் கடன் மோசடி வழக்கில் கைதான வைர வியாபாரி நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை, பிரிட்டன் நீதிமன்றம் 10வது முறையாக தள்ளுபடி செய்துள்ளது.

ஜாமீன் மனுவை விசாரித்த ராயல் நீதிமன்ற நீதிபதி Michael Fordham, நீரவ் மோடி ஜாமீனில் விடுவிக்கப்பட்டால் தலைமறைவாகக் கூடிய அபாயம் இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் மிகவும் கவனமாக மதிப்பீடு செய்த பிறகு மனுதாரருக்கு எதிராக ஆதாரப்பூர்வமான வழக்கு இருப்பதை பிரிட்டன் நீதிமன்றம் இருமுறை உறுதி செய்திருப்பதாக சுட்டிக்காட்டிய நீதிபதி, நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.