54 
உலகம்

வடகொரியாவின் புதிய போர்க்கப்பல் சேதம் என தகவல்.. அதிபர் கிம் ஜாங் உன் பங்கேற்ற விழாவில் பரபரப்பு

வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் கலந்து கொண்ட விழாவில் அந்நாட்டின் புதிய போர்க்கப்பல் சேதமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Srini Vasan

வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் கலந்து கொண்ட விழாவில் அந்நாட்டின் புதிய போர்க்கப்பல் சேதமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

வடகிழக்கு துறைமுகமான சோங்ஜினில் நடந்த விழாவில், 5 ஆயிரம் டன் எடையுள்ள புதிய போர்க் கப்பல், அதன் சாய்வுப் பாதையில் இருந்து விலகிச் சென்று, சமநிலையை இழந்து, கப்பலின் அடிப்பகுதியின் சில பகுதிகளை நசுக்கியதாக கொரிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.