சர்வதேசத் தொழில்நுட்ப உலகையே அதிர வைக்கும் வகையில், உலகின் முன்னணி ஏஐ சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியாவின் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங், தனது திருமண உறவை மீறிய விவகாரத்தை பகிரங்கமாக ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டுள்ளார்.
புயலைக் கிளப்பிய தொடர்பு
சீன உளவு அமைப்போடு தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் தொழிலதிபர் ஆலிஸ் ஹுவாங் என்பவருடன் தனக்குத் தொடர்பிருந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், தனது தவறுக்கு எந்த விளக்கமும் இல்லை என்று கூறியுள்ள அவர், தனது குடும்பத்தினரிடமும் என்விடியா ஊழியர்களிடமும் உருக்கமாக மன்னிப்புக் கேட்டுள்ளார். அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத் துறையில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது இந்த விவகாரம்.
மின்னஞ்சலில் மன்னிப்பு...
1993ல் என்விடியா நிறுவனத்தைத் தொடங்கி, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அதனை பல ட்ரில்லியன் டாலர் மதிப்புள்ள முன்னணி நிறுவனமாக உயர்த்திய பெருமை 63 வயதான ஜென்சன் ஹுவாங்கையே சாரும்.
இந்நிலையில், ஊழியர்களுக்கு அவர் அனுப்பியுள்ள மின்னஞ்சலில், ’நான் என் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் துரோகம் செய்துவிட்டேன். எனது செயல்களுக்கு எதையும் காரணமாக சொல்ல முடியாது. என்விடியா போர்டு, பங்குதாரர்கள் மற்றும் ஊழியர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றத் தவறிவிட்டேன்,’ எனக் குறிப்பிட்டுள்ளதோடு, இனி என்விடியா நிறுவனத்திற்கு மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்த முழுமையாக உழைப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.
சர்வதேச அளவில் பரபரப்பு
இந்த தனிப்பட்ட மன்னிப்பு அறிக்கைக்குப் பின்னால் மிகப்பெரிய அமெரிக்க தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தல் அடங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. சிங்கப்பூரைச் சேர்ந்த காஸ்பீட் தரவு மைய நிறுவனத்துடன் தொடர்புடைய ஆலிஸ் ஹுவாங் என்ற பெண் தொழிலதிபர், சீன உளவு அமைப்பிற்காகத் தகவல்களைத் திரட்டும் நோக்கில் ஜென்சன் ஹுவாங்கை நெருங்கியதாக அமெரிக்க உளவுத்துறை சந்தேகம் எழுப்பியுள்ளது.
குறிப்பாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் காஸ்பீட் நிறுவனம் என்விடியாவிடம் இருந்து சுமார் 4.8 பில்லியன் டாலர் மதிப்பிலான அதிநவீன ஏஐ சிப்களை வாங்கியுள்ளது. அமெரிக்காவினால் சீனா மீது விதிக்கப்பட்ட வர்த்தக கட்டுப்பாடுகளை மீறி இந்த சிப்புகள் சீனாவுக்குக் கடத்தப்பட்டதா? என்ற கேள்வியும், சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜென்சனுக்கு நோட்டீஸ்
இதனைத் தொடர்ந்து, என்விடியா நிறுவனத்தின் சட்ட வல்லுநர் குழு இதைப் பற்றி விசாரித்து, தேசியப் பாதுகாப்பு அல்லது என்விடியாவின் வர்த்தக ரகசியங்கள் எதுவும் கசியவில்லை என்று முதற்கட்டமாகத் தெரிவித்துள்ளது.
அதேசமயம், அமெரிக்க நாடாளுமன்றத்தின் மூத்த உறுப்பினர்கள் சிலர், இது தொடர்பாக நவம்பர் 18ஆம் தேதிக்குள் நேரில் விளக்கம் அளிக்குமாறு ஜென்சன் ஹுவாங்கிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
பங்குகள் சரிவு
மற்றொரு புறம், இந்த விவகாரம் தொடர்பாகப் பேசியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜென்சன் ஹுவாங் ஒரு நேர்மையான மனிதர், அமெரிக்காவிற்கு மிகச் சிறந்த பங்களிப்பை அளித்திருக்கிறார் எனக் கூறி அவருக்கு ஆதரவளித்துள்ளார்.
சீனா இந்த குற்றச்சாட்டுகளை அடிப்படையற்ற வதந்தி என மறுத்துள்ளது. இருப்பினும், 4.5 ட்ரில்லியன் டாலர் சந்தை மதிப்பு கொண்ட என்விடியா நிறுவனத்திற்கு ஜென்சன் ஹுவாங் மட்டுமே மிக முக்கியமான பலமாக இருக்கும் சூழலில், இந்த விசாரணை மற்றும் அரசியல் அழுத்தங்களால் நிறுவனத்தின் பங்குகள் சரிவடையும் என முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
தொழில்நுட்ப உலகில் ஏஐ சாம்ராஜ்யத்தைக் கட்டி ஆளும் என்விடியாவின் தலைவர் மீதான இந்த உளவுச் சந்தேகமும் தனிப்பட்ட சர்ச்சையும், உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கமிட்டியின் விசாரணை முடிவுகளில்தான், என்விடியாவின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும்.
CEO ராஜினாமா
இந்த நிலையில், உலகின் முன்னணி சிப் நிறுவனமான Nvidia தலைமை செயல் அதிகாரி ஜென்சென் ஹூவாங் ராஜினாமா செய்துள்ளார்.
சீன பெண் உளவாளியுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் பதவி விலகி உள்ளார்.
வீடியோவை காண...