பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்காவுக்குள் நுழைய மேலும் 7 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தடை விதித்துள்ளார். ஏற்கனவே 12 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை உள்ள நிலையில், தற்போது புர்கினா பாஸோ, மாலி, நிகர், தெற்கு சூடான், சிரியா, லாவோஸ் , சியாரா லியான் உள்ளிட்ட 7 நாடுகளின் மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆவணங்களை சரி பார்க்கும் முறையில் அலட்சியம் காட்டுவது, விசா காலம் முடிந்த பிறகும் தங்குவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பல நாடுகளை சேர்ந்தவர்களுக்கு டிரம்ப் தடை விதித்து வருகிறார்.