சிக்லாயோவிலிருந்து (Chiclayo) சாண்டா குரூஸ் டி சுச்சாபாம்பா (Santa Cruz de Succhabamba) வரையிலான இந்தப் பயணத்தின்போது படம்பிடிக்கப்பட்ட வீடியோ, பெரு நாட்டு விமானப்படையால் வெளியிடப்பட்டுள்ளது. பெரு நாட்டு விமானப்படை வெளியிட்ட சுவாரஸ்ய வீடியோ,சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
மின்சாரத்தில் இயங்கும் முதல் பயண விமானம்
மின்சாரத்தில் இயங்கும் முதல் பயண விமானத்தை சோதனை செய்து சீனா சாதனை படைத்துள்ளது.
அந்நாட்டின் கமர்ஷியல் ஏர்கிராஃப்ட் கார்ப்பரேஷன் ஆஃப் சைனா என்ற நிறுவனம் உருவாக்கிய 'CE-25A' எனும் மின்சார விமானத்தில் பொதுமக்களை அழைத்துச் சென்ற சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிவடைந்தது. இது 57 நிமிடம் 46 விநாடிகள் விநாடிகள் நடைபெற்றது.
ஏஐ-யை பயன்படுத்தி மோசடி செய்த இளைஞர் சரண்
தென்கொரியாவின் பட்டயக்கணக்காளர் தேர்வில் முதலிடம் பிடித்த இளைஞர் தான் ஏஐ-யை பயன்படுத்தி மோசடி செய்து வென்றதாக கூறி குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
ஹான் என்ற இளைஞர் கணக்காளர் தேர்வில் 400க்கு 397.5 மதிப்பெண்களைப் பெற்றிருந்த நிலையில் அவர் மீது பல்வேறு சந்தேகங்கள் கிளம்பின. இதனையடுத்து அவர், தான் மறைத்து வைத்திருந்த நுண்ணிய கேமரா மூலம் கேள்விகளைப் படம்பிடித்து, ஏ.ஐ. உதவியுடன் விடைகளைப் பெற்றுத் தேர்வெழுதியதை ஒப்புக்கொண்டார். இதன்மூலம் முதலிடம் பிடித்த இளைஞரின் மோசடி அம்பலமானது.
மத்தியக் கிழக்கை சென்றடைந்த USS தியோடர் ரூஸ்வெல்ட்
அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமான USS தியோடர் ரூஸ்வெல்ட் Theodore Roosevelt விமானம் தாங்கி போர்க் கப்பல் மத்திய கிழக்குக்கு சென்றடைந்துள்ளது.
ஏற்கெனவே மத்தியக் கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள USS ஜார்ஜ் எச்.டபிள்யூ. புஷ் மற்றும் USS ஜார்ஜ் வாஷிங்டன் ஆகிய 2 விமானம் தாங்கி போர்க்கப்பல்களுடன் இணைந்து 15ஆம் தேதி முதல் பணியை தொடங்கியது.
தாய்லாந்தின் புக்கெட்டில் நேர்ந்த தீ விபத்தில் 11 பேர் பலி
தாய்லாந்தின் சுற்றுலா தீவான புக்கெட்டில் வணிக வளாகம் கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.
அதிகாலை நேரத்தில் வாடகை வாகன நிறுவனம் செயல்படும் கட்டடத்தில் தொடங்கிய தீ, அடுத்தடுத்து பல கட்டடங்களுக்கும் பரவியதையடுத்து, சுமார் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 15 பேர் காயமடைந்த விபத்து நேர்ந்த பகுதி புகழ்பெற்ற படோங் கடற்கரைக்கு அருகே நகர் பகுதியில் உள்ளது.
மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டன் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் ஆகியோர், மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை சந்தித்து பேசினர். தொடர்ந்து சச்சின் மற்றும் உள்ளூர் சிறுவர்களுடன் இணைந்து, இளவரசர் வில்லியம் சாலையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார்.