California governor 
உலகம்

அதிபர் டிரம்ப் தற்காலிகமானவர் - கலிபோர்னியா ஆளுநர் நியூசம்

புதிய அரசு அமைந்த பின் பாரிஸ் ஒப்பந்தத்தில் அமெரிக்க மீண்டும் இணையும் என்றார்.

Web Team

அதிபர் டிரம்ப் தற்காலிகமானவர் என்ற கலிபோர்னியா ஆளுநர், அவரது மிரட்டல் முயற்சிகளுக்கு எதிராக மற்ற நாடுகள் உறுதியாக இருக்க வேண்டும் என்றார். பிரேசிலின் பெலெம் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாநாட்டில் கலந்து கொண்ட நியூசம் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்திலிருந்து இரண்டு முறை வெளியேறியதற்காகவும், எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களை ஆதரிக்கும் டிரம்பின் முட்டாள்தனத்தையும் கடுமையாக சாடினார்.

2028 தேர்தலில் அதிபர் வேட்பாளராகக் கருதப்படும் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த நியூசம், புதிய அரசு அமைந்த பின் பாரிஸ் ஒப்பந்தத்தில் அமெரிக்க மீண்டும் இணையும் என்றார். இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்றுக் கொண்ட டிரம்ப், பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை விலக்கிக் கொண்டது குறிப்பிடதக்கது.