ஜெனிபர் பாரெட்டோ 
உலகம்

மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற போர்ட்டோ ரிகோ அழகி

திருமணமாகி 7 வயதில் குழந்தை உள்ள ஜெனிபர் பாரெட்டோ பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற முதல் தாய் என வரலாறு

Manigandan Raja

நிகழாண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை, போர்ட்டோ ரிகோ நாட்டை சேர்ந்த ஜெனிபர் பாரெட்டோ கைப்பற்றி உள்ளார்.

இதில் ஹைலைட் என்னவென்றால், இவருக்கு திருமணமாகி 7 வயதில் ஒரு குழந்தை உள்ளது என்பதுதான். இதன் மூலம், பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற முதல் தாய் என்ற பெருமையை பெற்றதோடு, புதிய வரலாறையும் அவர் படைத்துள்ளார். போர்ட்டோ ரிகோ தலைநகர் சான் ஜுவான் நகரில் 75-வது பிரபஞ்ச அழகி போட்டி நடைபெற்றது.