26 
உலகம்

அதிபர் வேட்பாளர் ட்ராஸ்கோவ்ஸ்கிக்கு ஆதரவாக பேரணி.. ஆயிரக்கணக்கான மக்கள் வார்சாவின் வீதிகளில் திரண்டு பேரணி

போலந்தில் லிபரல் கட்சியின் அதிபர் வேட்பாளர் ட்ராஸ்கோவ்ஸ்கிக்கு ஆதரவாக, அவரது ஆதரவாளர்கள் அலைகடலென திரண்டு ஆதரவு தெரிவித்தனர்.

Srini Vasan

போலந்தில் லிபரல் கட்சியின் அதிபர் வேட்பாளர் ட்ராஸ்கோவ்ஸ்கிக்கு ஆதரவாக, அவரது ஆதரவாளர்கள் அலைகடலென திரண்டு ஆதரவு தெரிவித்தனர்.

போலந்தில் அடுத்த வாரம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிபர் வேட்பாளருக்கு ஆதரவாக பல்லாயிரக்கணக்கான மக்கள் வார்சாவின் வீதிகளில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மே 18 ம் தேதி நடந்த தேர்தலின் முதல் சுற்றில் ட்ர்சாஸ்கோவ்ஸ்கி 31.1% வாக்குகளையும், தேசியவாத வேட்பாளர் கரோல் நவ்ரோக்கி 29.1% வாக்குகளையும் பெற்ற நிலையில் இரண்டாம் கட்ட வாக்குபதிவு ஜூன் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதில் முன்னிலை பெற ட்ர்சாஸ்கோவ்ஸ்கி போராடி வருவது குறிப்பிடதக்கது. பிரதமர் டொனால்ட் டஸ்க் உடன் கூட்டணி வைத்துள்ள ட்ர்சாஸ்கோவ்ஸ்கி நீதித்துறையை சீர்திருத்துவதாக வாக்குறுதியளித்துள்ளார்.