உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா சம்மதம்
இந்தியாவின் போர் நிறுத்த முன்மொழிவை பரிசீலிக்க தயாராக உள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா, தங்களிடம் 4 போர் நிறுத்த முன்மொழிவுகள் இருப்பதாகவும், சாத்தியமான போர் நிறுத்த முன்மொழிவுகள் இந்தியா, துருக்கி, எகிப்து, அமெரிக்காவிடம் இருந்து வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இவற்றில் இந்தியாவின் முன்மொழிவுதான் மிகவும் விரிவானது மற்றும் அதிக விஷயங்களை உள்ளடக்கியது என தெரிவித்துள்ளார்.
மீண்டும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
வடகொரியா AI தொழில்நுட்பத்துடன் கூடிய பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவி சோதனை நடத்தியுள்ளது. வடகொரியாவின் துறைமுக நகரமான வின்சன் நகரில் இருந்து 4 ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியது.
இந்த ஏவுகணைகள் கொரிய தீபகற்பத்தில் 700 கிலோ மீட்டர் தூரம் சென்று தென் கொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் விழுந்தன. இந்த ஏவுகணை சோதனையை தொடர்ந்து தென் கொரியா தேசிய பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தியது.