Sri lanka 
உலகம்

இலங்கையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கை

இந்தியா கப்பல்கள் மூலம் உணவு பொருட்களை அனுப்பி வைத்துள்ளது.

Web Team

இலங்கையில் டிட்வா சூறாவளி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆபரேஷன் சாகர் பந்து நடவடிக்கை மூலம் பல உயிர்களை காப்பாற்றியதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், இந்தியா கப்பல்கள் மூலம் உணவு பொருட்களை அனுப்பி வைத்துள்ளது. இலங்கை விமான படையுடன் இணைந்து தேடுதல் பணிகளில் இறங்கவும், வெள்ளத்தில் சிக்கியோரை மீட்கவும் அனுப்பி வைக்கப்பட்ட 2 ஹெலிகாப்டர்கள் மூலம் ஆபரேஷன் சாகர் பந்து என்ற மீட்பு நடவடிக்கை மூலமாக பல உயிர்களை காப்பாற்றியுள்ளதாக வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.