பெண் மாலுமிகள் குளியலறைப் பகுதியில் வைக்கப்பட்ட கேமரா
- ஆஸ்திரேலிய கடற்படைக் கப்பலான லீவின் கப்பலில் பெண் மாலுமிகள் பயன்படுத்தும் குளியலறைப் பகுதியில் இரகசிய கேமரா கண்டறியப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- இச்சம்பவம் குறித்து ராணுவக் காவல்துறை தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது. விசாரணை சுமூகமாக நடப்பதற்கும், மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் கப்பல் தற்காலிகமாகத் துறைமுகத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளது.
ஏவுகணை சோதனை நடத்திய வடகொரிய ராணுவம்
- வடகொரியா, நீர்மூழ்கி கப்பலில் இருந்து இரண்டு ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வடகிழக்கு கடற்கரையில் உள்ள கியோங்போ (Kyongpo) வளைகுடாவில் நடந்த சோதனையில், ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை ஏவுகணைகள் துல்லியமாக தாக்கின.
- அணுசக்தி தடுப்புத் திறனை சரிபார்க்கும் நோக்கத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.