டேட்டா சென்டர்கள் அமைப்பதற்காக 10 லட்சம் செயற்கைகோள்களை விண்வெளியில் நிலைநிறுத்தும் 'ஸ்டார்மைண்ட்' திட்டத்தால் நட்சத்திரங்களின் எண்ணிக்கை அதிகரித்து இரவின் தோற்றமே மாறலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
விண்வெளி குப்பைகளின் அளவு அதிகரிக்கலாம் என்றும், 1 சதவீத செயலிழப்பு ஏற்பட்டால் கூட சரி செய்ய முடியாமல் செயற்கைகோள்கள் விண்வெளியிலேயே தங்கிவிடும் சூழல் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. அதோடு, செயற்கைக்கோள்கள் மூலம் வெளியாகும் துகள்கள் மூலம் ஓசோன் படலம், காலநிலை, காற்றின் தரம் பாதிக்கக்கூடும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.