ISS ல் சுனிதா வில்லியம்ஸ் 
உலகம்

ISS-ஐ சென்றடைந்த SPACEX CREW 9 டிராகன் விண்கலம்.. ISS ல் தங்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர்

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பூமிக்கு அழைத்து வருவதற்காக SPACEX CREW 9 டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது.

Srini Vasan

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பூமிக்கு அழைத்து வருவதற்காக SPACEX CREW 9 டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது.

கடந்த ஜூன் மாதம் போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் விண்வெளிக்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர்,தொழில்நுட்ப காரணங்களால் அங்கேயே தங்கியுள்ளனர்.

இந்நிலையில், அவர்களை பூமிக்கு அழைத்து வருவதற்காக SPACEX CREW 9 டிராகன் விண்கலம் மூலம், நாசாவின் நிக் ஹேக் (( Nick Hague )) மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் (( Aleksandr Gorbunov )) ஆகியோர் சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைந்தனர்.

இவர்கள் அனைவரும் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பூமிக்கு திரும்ப உள்ளனர்.