ஸ்டார்ஷிப் சோதனை முயற்சியின் போது விண்ணை நோக்கி சென்ற சூப்பர் ஹெவி ராக்கெட் என்ஜின் கோளாறு காரணமாக மெக்சிகோ வளைகுடாவில் விழுந்து வெடித்துச் சிதறியது.
டெக்சாஸில் உள்ள ஸ்டார்பேஸ் தளத்திலிருந்து ஏவப்பட்ட இந்த ராக்கெட் திட்டமிட்டப்படி விண்ணில் சீறி பாய்ந்து, விண்கலத்திலிருந்து வெற்றிகரமாகப் பிரிந்து பூமியின் சுற்றுப்பாதையை அடைந்தது.
மீண்டும் பூமிக்குத் திரும்பும் முயற்சியின் போது என்ஜில் ஏற்பட்ட கோளாறால் ஏவுதளத்தில் தரையிறக்கும் திட்டம் கைவிடப்பட்டு மெக்சிகோ வளைகுடாவை நோக்கித் திருப்பி விடப்பட்டது.கடலில் தரையிறங்கிய சில நொடிகளில் ராக்கெட் வெடித்து சிதறியது.