கொலம்பியாவில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் 17 மணி நேரம் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த 76 பேரை சிறப்புப்படையினரும், போலீஸாரும் மீட்டனர். மேலும், ஆயுத கும்பலில் ஒருவரை சுட்டுக்கொன்ற அதிகாரிகள், 4 பேரை கைது செய்தனர்.
பணம் ஏற்றிச் செல்லும் கவச வாகனத்தை கொள்ளையடிக்க முயன்ற ஆயுதக் கும்பல், பாதுகாப்புப் படையினரிடம் இருந்து தப்பிப்பதற்காக சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்து வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் என 76 பேரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தது.