Sri lanka Boat 
உலகம்

ராமேஸ்வரம் மீனவர்களை விடுவித்த இலங்கை நீதிமன்றம்

அபராத தொகையை மீனவர்கள் கட்ட தவறினால் ஆறு மாத காலம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்தார்.

Manigandan Raja

ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து ஆகஸ்ட் 12ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 9 மீனவர்களை எல்லை தாண்டிதாக கூறி இலங்கை கடற்படையினர் கைது
செய்தனர். இந்த நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் ஒன்பது பேரும் இன்று நான்காவது முறையாக மன்னார் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்டனர்.

அப்போது அவர்களை விசாரித்த நீதிபதி ராமேஸ்வரம் மீனவர்கள் ஒன்பது பேருக்கும் தலா ரூ 2.5 லட்சம் இலங்கை பணம் அபராதம் விதித்து உத்தரவிட்டார் இந்த அபராத தொகையை
மீனவர்கள் கட்ட தவறினால் ஆறு மாத காலம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்தார்.

மேலும் மீன்பிடி படகுக்கான விசாரணை வரும் பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி நடைபெறும் எனவும் அன்றைய தினம் படகின் உரிமையாளர் நீதிமன்றத்தில் உரிய ஆவணங்களுடன் ஆஜராக
வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.