அமெரிக்கப் படைகளுக்கு எதிராக ஈரான் நடத்திய தாக்குதலில், எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் இணைய சேவை பயன்படுத்தப்பட்டதாக தி வாஷிங்டன் போஸ்ட் அறிவித்துள்ளது.
அமெரிக்கப் படைகள் ஈரானின் தகவல் தொடர்பு அமைப்புகளை முடக்கிய நிலையில், ஸ்டார்லிங்கை பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அறிந்ததும் எலான் மஸ்க் கோபமடைந்ததாகவும், அமெரிக்காவும் தாக்குதலுக்கு 'ஸ்டார்ஷீல்டை' பயன்படுத்தியதை அறிந்து அவர் அதிருப்தி அடைந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.