Indonesia 
உலகம்

இந்தோனேசியாவில் புயல் மழையால் வெள்ளம், நிலச்சரிவு

சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மீட்புப்பணியில் அந்நாட்டு ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது.

Web Team

இந்தோனேசியாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 303 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் மாயமான நிலையில், அவர்களை தேடும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. 2 லட்சத்திற்கு அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மீட்புப்பணியில் அந்நாட்டு ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது.