துருக்கி இஸ்தான்புலில் பிரைட் பேரணிக்கான தடையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டோரை போலீசார் கைது செய்தனர்.
துருக்கியில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் LGBTQ+ பேரணி நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனை கண்டித்து மத்திய ஓர்டகோய் மாவட்டத்திற்கு அருகே 50க்கும் மேற்பட்டோர் வானவில் கொடிகளுடன் பேரணியாக செல்ல முயன்றனர்.
அவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தபோது போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பேரணி நடைபெறாமல் இருக்க நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.