உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் சூழலில் போர் நிறுத்தம் தொடர்பான அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
போர் மூன்றாண்டுகளை கடந்து நடைபெற்று வரும் நிலையில் இந்தாண்டு தொடக்கத்தில் போர் நிறுத்தம் தொடர்பாக இருசுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்நிலையில், அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை புதன்கிழமை நடைபெறவுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளார்.