Trump 
உலகம்

இந்தியாவுக்கு விதித்த 50% வரியை நீக்க வேண்டும்

இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தனர்.

Web Team

இந்தியாவுக்கு எதிரான 50 சதவீதம் வரியை நீக்கக் கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம்
உக்ரைன் போருக்கு மறைமுகமாக உதவி செய்வதாக கூறி இந்தியாவிற்கு அதிக வரிகளை விதித்து டிரம்ப் உத்தரவிட்டார். இந்த அதீத வரி விதிப்பு காரணமாக அமெரிக்க நுகர்வோர்கள் மட்டுமின்றி இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தனர்.