24 
உலகம்

மன்னராட்சி ஒழிக்கப்பட்ட நாளான மே 29 ல் போராட்டம் அறிவிப்பு.. மன்னராட்சி ஆதரவுத் தலைவர்கள் போராட்டத்திற்கு அழைப்பு

நேபாளத்தில் மன்னராட்சி ஆதரவாளர்களின் போராட்டத்தை தோற்கடிக்க ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தயாராக இருக்குமாறு அக்கட்சியின் தலைவரும், பிரதமருமான கேபி சர்மா ஒலி கேட்டுக் கொண்டுள்ளார்.

Srini Vasan

அண்டை நாடான நேபாளத்தில் 2008 ல் மன்னராட்சி முடிவுக்கு வந்து மக்களாட்சி அமலுக்கு வந்தது.

அரசியல் கூட்டணி குழப்பம் உட்பட பல்வேறு பிரச்னைகள் காரணமாக அங்கு மீண்டும் மன்னராட்சியை அமல்படுத்த வலியுறுத்தி போராட்டம் வெடித்து வருகிறது.

இந் நிலையில், 17 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் மன்னராட்சி ஒழிக்கப்பட்ட நாளான மே 29 அன்று, மன்னராட்சி ஆதரவுத் தலைவர்கள் காலவரையற்ற போராட்டத்தைத் தொடங்க உள்ளனர்.

இதையடுத்து அன்றைய தினம் காத்மாண்டுவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்குமாறு பிரதமர் ஒலி தனது கட்சியினருக்கு அறிவுறுத்தினார்.