புதின் முற்றிலும் பைத்தியமாகிவிட்டார் என உக்ரைனில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலை சுட்டுக்காட்டி அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையாக சாடினார்.
இது தொடர்பாக அவரது பதிவில், புதின் தேவையே இல்லாமல் உக்ரைனில் மக்களை கொல்வதாக குற்றம்சாட்டியதுடன், சமீபத்தில் உக்ரைன் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் ரஷ்யா மீதான தடைகளை அதிகரிப்பது குறித்து பரிசீலனை செய்து வருவதாக தெரிவித்தார்.
மேலும் உக்ரைனை முழுமையாக கைப்பற்றும் முயற்சி ரஷ்யாவின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என காட்டமாக தெரித்தார்.