29 
உலகம்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டெஸ்லா ரோபோடாக்சி..

பல ஆண்டு எதிர்பார்ப்புக்கு பிறகு தனது ஆளில்லா டாக்சி சேவையை டெஸ்லா நிறுவனம் துவக்கி உள்ளது.

Web Team

பல ஆண்டு எதிர்பார்ப்புக்கு பிறகு தனது ஆளில்லா டாக்சி சேவையை டெஸ்லா நிறுவனம் துவக்கி உள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநில நகரான ஆஸ்டினில் வரையறுக்கப்பட்ட பகுதிக்குள் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

டெஸ்லாவின் மாடல் Y காரில் மாற்றங்கள் செய்யப்பட்டு ரோபோடாக்சியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சமூக வலைதள இன்புளூயன்சர்கள் மற்றும் சிலர் தேர்த்தெடுக்கப்பட்டு அவர்கள் ரோபோடாக்சியில் பயணித்து வருகின்றனர்.

காலை ஆறு மணி முதல் நள்ளிரவு வரை இந்த சேவை நடத்தப்படும் எனவும் பயணத்திற்கு 4 புள்ளி 20 டாலர் கட்டணமாக வசூலிக்கப்படும் எனவும் டெஸ்லா தெரிவித்துள்ளது.