ஆக்சிஜன் சிலிண்டர் 
உலகம்

பாகிஸ்தானில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து கோர விபத்து

அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸில் சிலிண்டர் வெடித்தது நோயாளி உட்பட 10 பேர் உடல் சிதறி பலியானதாக தகவல்

Manigandan Raja

பாகிஸ்தானில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து கோர விபத்து அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸில் சிலிண்டர் வெடித்தது நோயாளி உட்பட 10 பேர் உடல் சிதறி பலியானதாக தகவல்

தெற்கு பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில், அரசு மருத்துவமனையில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததில், நோயாளி உட்பட 10 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

கோர விபத்து

தார்பார்கர் ((Tharparkar )) மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் நோயாளிகளை மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றிக் கொண்டிருந்தபோது இந்த கோர விபத்து நிகழ்ந்ததாகத் எஸ்.பி. ஆரிஃப் அஜீஸ் தெரிவித்தார்.