Trumph boycott g20 
உலகம்

தென்னாப்பிரிக்கா G20 மாநாட்டை புறக்கணிக்கும் டிரம்ப்

அதிபர் சிறில் ராமபோசா தரக்குறைவாக பேசுவதாகவும், பொய்களை பரப்புவதாகவும் கண்டனம் தெரிவித்த வெள்ளை மாளிகை

Web Team

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் G20 மாநாட்டை அதிபர் டிரம்ப் புறக்கணிப்பதாக வெள்ளை மாளிகை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அமெரிக்கா குறித்து தென்னாப்பிரிக்க அதிபர் சிறில் ராமபோசா தரக்குறைவாக பேசுவதாகவும், பொய்களை பரப்புவதாகவும் கண்டனம் தெரிவித்த வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர், தென்னாப்பிரிக்க அரசு நடத்தும் G20 மாநாட்டில் அமெரிக்கா அதிபர் பங்கேற்க மாட்டார் என்று தெரிவித்தார். அதே நேரம் ஜி20 மாநாட்டை அடுத்த ஆண்டு அமெரிக்கா நடத்தும் என்பதை தெரிவிப்பதற்காக தென்னாப்பிரிக்காவுக்கான அமெரிக்க தூதர் அம்மாநாட்டில் பெயரளவில் பங்கேற்பதாகவும் தெரிவித்தார்.