6வாஷிங்டன், அமெரிக்கா 
உலகம்

மே 8 ஆம் தேதியை வெற்றி தினமாக அறிவித்த டிரம்ப்.. மற்ற நாடுகளைப் போலவே போர் வெற்றியை கொண்டாட வேண்டும்

இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவின் பங்கைக் கௌரவிக்கும் வகையில் மே 8 ம்தேதியை வெற்றி தினமாக அதிபர் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

Srini Vasan

இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவின் பங்கைக் கௌரவிக்கும் வகையில் மே 8 ம்தேதியை வெற்றி தினமாக அதிபர் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

1945 ஆம் ஆண்டு மே 8 ம்தேதி ஐரோப்பாவில் ஜெர்மனி சரணடைந்தையொட்டி இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த நாளை இரண்டாம் உலகப் போரின் நட்பு நாடுகள் வெற்றி தினமாக கொண்டாடி வருகின்றன.

இந்நிலையில் அமெரிக்கா இல்லாமல் இரண்டாம் உலகப் போரில் வெற்றி சாத்தியமில்லை என்ற டிரம்ப் மற்ற நாடுகளைப் போலவே அமெரிக்கர்களும் போர் வெற்றிகளைக் கொண்டாட வேண்டும் எனக்கூறி வெற்றி தினத்தை அறிவித்தார்.

மேலும் இது விடுமுறையை தினமாகாது என்ற டிரம்ப் நவம்பர் 11 ஆம் தேதியை முதலாம் உலகப் போரின் வெற்றி நாளாகவும் அறிவித்தார்.