டிரம்ப் கட்சி படுதோல்வி நியூஸ்தமிழ்24x7
உலகம்

இடைக்காலத் தேர்தலில் டிரம்ப் கட்சி படுதோல்வி - ஜனநாயகக் கட்சியிடம் வீழ்ந்த குடியரசுக் கட்சி

அமெரிக்காவில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இடைக்காலத் தேர்தலில் அதிபர் டிரம்பின் குடியரசுக் கட்சி படு தோல்வி அடைந்தது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளான பிரதிநிதிகள் அவை, செனட் அவை ஆகிய இரண்டையும் ஜனநாயகக் கட்சியிடம் பறிகொடுத்தது.

Azhagiri Arumugam

இடைத்தேர்தலில் செனட் சபையை இழந்த குடியரசு கட்சி

அமெரிக்க இடைத்தேர்தலில் அதிபர் டிரம்பின் குடியரசுக் கட்சி செனட் சபையின் பெருன்பான்மையை இழந்தது. எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி செனட் சபையில் 53 இடங்களையும், பிரதிநிதிகள் அவையில் 219 இடங்களை பிடித்து பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் இரு அவைகளையும் கைப்பற்றியுள்ளது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் டிரம்ப்பின் கட்டுப்பாட்டிலிருந்து நழுவியுள்ளதால், அவரது எஞ்சிய 2 ஆண்டு ஆட்சிக் காலத்தில் புதிய சட்டங்களை நிறைவேற்றுவதிலும் நிர்வாக முடிவுகளை எடுப்பதிலும் பெரும் முட்டுக்கட்டை ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

படுதோல்வி

நானே அதிகாரம் மிக்கவன்...

அமெரிக்க இடைத்தேர்தலில் டிரம்ப் தலைமையிலான குடியரசுக் கட்சி நாடாளுமன்ற இரு அவைகளையும் இழந்த நிலையில் "நானே அதிகாரமிக்கவன்" என்று டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தேர்தலில் தாம் நேரடியாகப் போட்டியிட்டிருந்தால் குடியரசுக் கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கும் என்று கூறியவர், வேட்பாளர்கள் வெற்றி பெற்றதற்கும், தோல்வியடைந்ததற்கும் உள்ள காரணங்கள் குறித்து ஆலோசிக்க தான் ஒரு அரசியல் விமர்சகராக மாறப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் பெரும் ஆதரவுடன் வெற்றி

அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களில் போட்டியிட்ட இந்திய வம்சாவளி வேட்பாளர்களில் பலர் பெரும் ஆதரவுடன் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கின்றனர். புளோரிடாவின் 22ஆவது நாடாளுமன்ற தொகுதியிலிருந்து ஜனநாயகக் கட்சியின் பியா தண்டியா, வர்ஜீனியாவின் 10ஆவது நாடாளுமன்ற தொகுதியிலிருந்து ஜனநாயகக் கட்சியின் சுஹாஸ் சுப்ரமணியம் ஆகியோர் வெற்றி பெற்றனர். அதே போல் மேரிலாந்து துணை ஆளுநர் அருணா மில்லரும் தனது பதவியை தக்க வைத்துள்ளார்.

டிரம்ப் கையெழுத்து

94 ஆண்டுகளில் முதன்முறையாக...

அமெரிக்க இடைத்தேர்தலில் 94 ஆண்டுகளில் முதன்முறையாக கன்சாஸ் Kansas மாநில செனட் தொகுதியை ஜனநாயகக் கட்சி கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. கன்சாஸ் மாநிலம் பாரம்பரியமாக குடியரசுக் கட்சியின் வலுவான கோட்டையாக இருந்து வந்தது.

கடந்த 94 ஆண்டுகளாக அங்கு குடியரசுக் கட்சியினரே தொடர்ந்து செனட் தொகுதிகளில் வெற்றி பெற்று வந்த நிலையில், தற்போது ஜனநாயகக் கட்சி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. தற்போதைய பொருளாதாரச் சூழல் மீதான மக்களின் அதிருப்தியே, இத்தகையதொரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

Anti-Communism Week

அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகள் வெளியாகவிருந்த சூழலில், அதிபர் டிரம்ப் நவம்பர் 1 முதல் 7 வரையிலான காலத்தை "கம்யூனிச எதிர்ப்பு வாரம்" என அறிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள இந்த அரசாணையில், சோசலிச மற்றும் கம்யூனிசக் கோட்பாடுகள் தனிமனித சுதந்திரம், பொருளாதார வாய்ப்பு மற்றும் அரசியல் கருத்துச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக விளங்குவதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

விண்ணில் இருந்து...

விண்ணில் இருந்து வாக்கு செலுத்திய விண்வெளி வீரர்கள்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீரர் அனில் மேனன் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து, அமெரிக்க இடைக்கால தேர்தலில் தனது வாக்குகளைப் பதிவு செய்தார்.

அவருடன் சேர்ந்து சக விண்வெளி வீரர்களான ஜெசிகா வாட்கின்ஸ் Jessica Watkins மற்றும் லூக் டெலானி Luke Delaney ஆகியோரும் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். இது குறித்த வீடியோவை அனில் மேனன் பகிர்ந்துள்ளார்.