ஐபோன் நிறுவனத்தை தொடர்ந்து அதன் முக்கிய தொழில் போட்டியாளரான சாம்சங் நிறுவனத்திற்கும் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவில் விற்கப்படும் ஐ போன்களை அமெரிக்காவிலேயே தயாரிக்க வேண்டும், இந்தியாவில் தயாரித்தால் 25 சதவிகித வரி விதிக்கப்படும் என சில தினங்களுக்கு முன்னர் டிரம்ப் மிரட்டல் விடுத்தார்.
இப்போது சாம்சங் நிறுவனத்தின் மீது தமது கோப பார்வையை திருப்பி உள்ள அவர், வேறு நாடுகளில் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவில் விற்கப்படும் சாம்சங் போன்களுக்கும் 25 சதவிகித வரி விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
ஐபோன் குறித்த டிரம்பின் மிரட்டலை தொடர்ந்து அதன் தயாரிப்பாளரான ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் இரண்டு புள்ளி 6 சதவிகிதம் குறைந்து அந்த நிறுவனத்திற்கு 70 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.