பரஸ்பர வரியை நிறுத்தி வைத்ததற்கான காலக்கெடுவை நீட்டிப்பதற்கான வாய்ப்பு இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அதிபராக பொறுப்பேற்றதும் பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரி விதித்து டிரம்ப் அதிரடி காட்டினார்.
இதனால் பெரும்பாலான நாடுகள் பாதிப்படைந்ததால், அமெரிக்காவை பேச்சுவார்த்தைக்கு அழைத்தன.
அதனை ஏற்ற டிரம்ப், பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக கடந்த ஏப்ரலில் அறிவித்தார்.
இந்நிலையில், அமெரிக்காவுடன் ஒப்பந்தங்களைச் செய்யாவிட்டால் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு வரி விதிப்பு தொடர்பாக கடிதம் அனுப்பப்படும் என்றார்.