23 
உலகம்

டெல் அவிவில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது குண்டு வீச முயற்சி.. அமெரிக்கா மற்றும் ஜெர்மன் குடியுரிமை பெற்ற நபர் கைது

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது பெட்ரோல் குண்டு வீச முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

Srini Vasan

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது பெட்ரோல் குண்டு வீச முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

அமெரிக்கா மற்றும் ஜெர்மன் குடியுரிமை பெற்ற Joseph Neumayer என்ற நபர், கடந்த 19ஆம் தேதி அமெரிக்க தூதரக கிளைக்கு வந்த நிலையில், காவலருடன் ஏற்பட்ட மோதலை அடுத்து தனது தோள்பையை விட்டு விட்டு தப்பிச் சென்றார்.

அதில் Molotov cocktail எனப்படும் மூன்று குண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரைத் தேடி கண்டுபிடித்து கைது செய்த அதிகாரிகள், அமெரிக்காவுக்கு நாடுகடத்தி நியூயார்க் விமான நிலையத்தில் எஃப்.பி.ஐ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.