உக்ரைனுக்கு இப்போது இரண்டே தேர்வு தான் உள்ளது என கூறியிருக்கும் அதிபர் ஜெலன்ஸ்கி, ஒன்று உக்ரைனின் கண்ணியத்தை இழப்பது மற்றொன்று முக்கிய நட்பு நாடை இழப்பது என தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 28 அம்ச திட்டம் தொடர்பாக ஜே.டி.வான்ஸ் உள்ளிட்டோருடன் ஆலோசித்த பிறகு பேசியுள்ள ஜெலன்ஸ்கி, உக்ரைன் வரலாற்றில் இது கடினமான தருணம் என தெரிவித்துள்ளார். அமைதியை நிலைநாட்டும் முயற்சி நியாயமான முறையில் இருக்க வேண்டும் எனவும் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.