உக்ரைனின் ட்ரோன் தாக்குதலையடுத்து ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் உள்ள முக்கியமான விமான நிலையங்களில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தை குறிவைத்து ட்ரோன்களை ஏவி உக்ரைன் தாக்குதலை நடத்தியது.
இதில் குடியிருப்புகள் தீக்கிரையாகியதில் ஒருவர் பலியான நிலையில் பலர் படுகாயமடைந்தனர். இதனால், மாஸ்கோவில் உள்ள நான்கு விமான நிலையங்களிலும் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன.