அமெரிக்கா அதிபர் டிரம்ப் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சீனா பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீன அதிபர் ஜின்பிங் தொலைபேசியில் பேசியதாக தெரிவித்துள்ள டிரம்ப், உக்ரைன்- ரஷ்யா போர், சோயாபீன்ஸ் மற்றும் பிற பண்ணை பொருட்கள் விற்பனை உள்ளிட்ட பல தலைப்புகளில் விவாதித்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும் எனது அழைப்பை ஏற்று சீன அதிபர் அதிபர் ஷி ஜின்பிங் அடுத்த ஆண்டு இறுதியில் அமெரிக்கா செல்லவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.