Trumph pakisthan 
உலகம்

பாகிஸ்தானுக்கு பிரம்மாண்ட ராணுவ உதவி செய்யும் அமெரிக்கா

பாகிஸ்தானுக்கு 686 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ராணுவ உதவியை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

Web Team

பாகிஸ்தானுக்கு 686 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ராணுவ உதவியை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. ஏற்கனவே பாகிஸ்தானுக்கு வழங்கிய F-16 போர் விமானங்களின் பராமரிப்பு, நவீன ராணுவ தொழில்நுட்பங்கள், ராணுவ தளவாடங்கள் உள்ளிட்டவற்றுக்காக இந்த நிதியுதவி வழங்கப்படுவதாக அமெரிக்க நாடாளுமன்றத்தில், அந்த நாட்டின் ராணுவ பாதுகாப்பு கூட்டுறவு முகமை தெரிவித்துள்ளது. லிங்-16 தொலைத்தொடர்பு சாதனங்கள், கிரிப்டோகிராபிக் இயந்திரங்கள், ஏவியானிக்ஸ் நுட்பம், பயிற்சி திட்டங்கள் மற்றும் முழுமையான ராணுவ சரக்கு போக்குவரத்து ஆகியவற்றுக்கு அமெரிக்க நிதி பயன்படுத்தப்படும் என தெரிகிறது.