Germany 
உலகம்

பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் இந்தியா வருகை

வர்த்தகம், முதலீடு, தொழில் நுட்பம், கல்வி, பாதுகாப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது பற்றி விவாதிக்கப்படும் என தெரிகிறது.

Manigandan Raja

பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் ஜெர்மனி பிரதமர் பிரீட்ரிக் மெர்ஸ் வருகிற 12, 13 ஆகிய தேதிகளில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். இது ஜெர்மனி பிரதமரின் இந்தியாவிற்கான முதல் அதிகாரப்பூர்வ பயணமாகும்.12 ஆம் தேதி அகமதாபாத்தில் பிரதமர் மோடி- ஜெர்மனி பிரதமர் பிரீட்ரிக் மெர்ஸ் பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தகம், முதலீடு, தொழில் நுட்பம், கல்வி, பாதுகாப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது பற்றி விவாதிக்கப்படும் என தெரிகிறது.