இஸ்ரேலின் தாக்குதலால் கடும் துயரத்திற்கு ஆளான பாலஸ்தீன மக்களுக்கு தனது உதவிகளை அதிகரிக்க உறுதி பூண்டுள்ளதாக, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் சூழல் குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நடந்த விவாதத்தில் பேசிய இந்திய பிரதிநிதி பர்வதநேனி ஹரீஷ், இது வரை பாலஸ்தீனியர்களுக்காக இந்தியா 12 கோடி அமெரிக்க டாலர் நிதியுதவி செய்துள்ளதாக கூறினார்.