ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குகிறது என்பதற்காக சீனா மீது கூடுதல் வரிகளை விதித்தால் அது உலகளாவிய அளவில் பல பின்விளைவுகளை ஏற்படுத்தும் என அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எணெணெய் வாங்கும் இந்தியா மீது கூடுதல் வரிகளை விதிக்கும் அமெரிக்கா, சீனாவுக்கு மட்டும் விதி விலக்கு அளிப்பது ஏன் என வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவிடம் கேள்வி எழுப்ப ப்படது.
அதற்கு இவ்வாறு பதிலளித்த அவர், சீனா, கச்சா எண்ணெயை சுத்திகரித்து பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாக கூறினார். எனினும் இதற்கு ஒரு மாற்று தீர்வை காண வேண்டும் என கூறிய அவர், இந்தியா மற்றும் சீனா மீது கூடுதலாக வரி விதிக்கும் செனட் மசோதா குறித்து பல ஐரோப்பிய நாடுகள் கவலை தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.