நேபாளத்தில் பனிபொழிவால் சிக்கிய 6 இந்தியர்கள் மீட்பு ஷே-போக்சுண்டோ தேசிய பூங்காவில் சிக்கிய இந்தியர்கள் தனியார் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டதாக தகவல்
நேபாளத்தின் டோல்பாவில் ((Dolpa)) கடும் பனிப்பொழிவால் சிக்கியிருந்த இந்திய சுற்றுலாப் பயணிகள் 6 பேர் தனியார் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.
ஷே-போக்சுண்டோ ((Shey-Phoksundo)) தேசியப் பூங்காவில் சிக்கியவர்களை மீட்க கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று சென்ற ராணுவ ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் திரும்பியது.
தற்போது மீட்கப்பட்ட நிலையில், அவர்கள் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.