Also Watch
Read this
By: Manigandan Raja

திமுகவின் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான ரகுபதி பட்ஜெட் மீதான விவாதத்தில் பேரவையில் உரையாற்றினார் அப்போது அவர் பேசியதாவது மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையிலான குழு எதற்கு? அந்த குழுவில் பிரவீன் சக்கரவர்த்தி உள்ளாரா? என கேள்வி எழுப்பினார்
உயர் கல்வித் துறை அமைச்சர் விசுவநாதன்
தமிழ்நாடு அரசின் எந்த அமைப்பிலும் பிரவீன் சக்கரவர்த்தி அங்கம் வகிக்கவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி தமிழக அரசின் சார்பாகவும் தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற அமைப்புகளின் சார்பாகவும் தமிழக அரசு அமைத்துள்ள குழுக்களின் சார்பாகவும், அவர் அங்கத்தினராக இல்லாதவர்.
ஒரு பத்திரிக்கையில் வந்த செய்தியை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு நீண்ட கால நெடிய பாரம்பரியம் கொண்ட ஒரு இயக்கத்தில் இருக்கும் உன்னால் அமைச்சர் சம்பந்தமில்லாமல், அவையில் இல்லாதவர் குறித்து கருத்துக்களை சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாது இதனை திருத்திக் கொள்ள வேண்டும்.
செங்கோட்டையன்
சோசியல் மீடியாவை வெல்லாமல் இருப்பதால்தான் நீங்கள் எதிர்க்கட்சியாக அமர்ந்து உள்ளீர்கள் சோசியல் மீடியாவை கையாண்டதன் மூலமாக வெற்றிகரமாக கையாண்டதன் மூலமாக நாங்கள் ஆளும் கட்சியமாக இருக்கோம்.
ரகுபதி
பட்ஜெட்டில் கசிவு என நிறைய முறை குறிப்பிட்டுள்ளீர்கள் கசிவு என்றால் என்ன எங்களுக்கு தெரியவில்லை.

மரிய வில்சன்
கசிவு என்றால் என்ன என்பது தொடர்பான ஆடிட்டிங் ரிபோர்ட் முதல்வர் விஜய் டேபிளில் உள்ளது. அதனை நீங்கள் படிப்பதற்கு நூறு நாட்கள் தேவைப்படும். மூன்று துறைகளில் ஆடிட்டிங் முடிந்து கசிவுகளை கண்டுபிடித்துள்ளோம். கசிவு என்றால் என்ன என்பதை முதல்வர் சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்வார்
அமைச்சர் என்.ஆனந்த்
ஆதாரத்துடன் அவர் சொல்ல வேண்டும். நாங்கள்தான் சொல்கிறோமே.. குற்றத்தை நீங்கள் நிரூபிக்க வேண்டும் குற்றத்தை நிரூபிக்காமல் எதுவேண்டுமானாலும் பேசலாமா? குற்றச்சாட்டை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். பழக்க தோசமாக இருந்திருக்கலாம் என நினைக்கிறேன்.
மக்கள் வரிப்பணத்தை தொட்டவர்களை விடமாட்டோம் தொட்டால் விடமாட்டோம் தொடவும் மாட்டோம் என முதல்வர் சொன்னார்கள். ஆனால் சனிக்கிழமை பனையூரில் நடைபெறும் வாரச்சந்தையில், மக்களின் வரிப்பணத்தை தொட்டவர்கள்'தான் வந்துகொண்டு இருக்கிறார்கள்
ரகுபதி
இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தில் 90 நாட்களில் பல உயிர்கள் திட்டத்தின் மூலம் காப்பாற்றப்பட்டு இருக்கிறார்கள். விபத்துகளில் உயிரிழப்பவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் தொடர்கிறது.
வி.பி.ஜி.ஸ்ரீ.ராம்ஜி திட்டத்தின் மூலம் ஒன்றிய அரசிடம் தவெக அரசு பணிந்து விட்டது. இந்த விவகாரத்தில் சத்தமே இல்லாமல் தமிழக அரசு சரண்டர் ஆகி விட்டது....
ராஜ்மோகன் பேட்டி
நிதி அறிக்கையை சார்ந்த பேச வேண்டும் அரசியல் கூட்டங்களில் பேசுவது போன்று பேசக்கூடாது.
சம்பந்தம் இல்லாமல் பொது தளத்தில் கிடைக்கும் செய்திகளை வைத்துக்கொண்டு பேசுவது மரபு அல்ல...
பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
லஞ்சம் என்பது மிகப்பெரிய குற்றம் என்பது ஒவ்வொரு அமைச்சரிடம் முதல்வர் சொல்லி வருகிறார் அவ்வாறு குற்ற செயல்களை ஈடுபட்டால் யாரும் அமைச்சராக இருக்க முடியாது என முதல்வர் கூறுகிறார் எந்த துறையிலும் இதுவரை ஒரு ரூபாய் கூட யாரும் லஞ்சம் வாங்கவில்லை.

பார்ட்டி பன்ட் எம்எல்ஏ பண்ட் அமைச்சர் ஃபண்ட் இன்னும் வசூலிக்கப்படவில்லை இந்த வரலாற்றை தூக்கி எரிந்துள்ளது தற்போதைய அரசு. இன்று காலை முதல் மேகதாது பிரச்சினையை ஜனநாயக பார்வையுடன் முதல்வர் பேசினார்.
தொகுதி மறுவரை தொடர்பாக அனைத்து கட்சி எம்பிக்கள் கூட்டத்தை முதல்வர் கூட்டி உள்ளார் மலை இந்த எம்பிக்களுக்கான அனைத்து கட்சி கூட்டத்தில் திமுக கலந்து கொள்ளுமா?
உதயநிதி ஸ்டாலின்
தொகுதி மறுவரை குறித்து ஒட்டுமொத்த இந்தியாவுக்கே முதல் முறையாக பேசியவர் முன்னாள் முதல்வர் மு க ஸ்டாலின் தான். டிலிமிடேஷனை எதிர்த்து இந்தியாவிற்கே முதல் முதலில் குரல் கொடுத்தவர் மு.க ஸ்டாலின்.
நாளை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கூட்டி உள்ளீர்கள் இதற்கான சரியான முடிவை எங்களுடைய தலைவர் ஆலோசனை செய்து அந்த முடிவை எடுப்பார். தற்பொழுது பேசுவது நிதிநிலைமை மற்றும் வேளாண்மை பட்ஜெட்டை குறித்தானது. அது தொடர்பான கேள்வியை எங்களது உறுப்பினர்கள் கேட்கிறார்கள் முடிந்தால் நீங்கள் அதற்கு பதில் சொல்லுங்கள்.
ரகுபதி
பட்ஜெட்டை வரவேற்கவாக நான் இங்கு உட்கார்ந்து உள்ளேன்? எதிர்க்கட்சி என்றால் அரசுக்கு ஆலோசனைகள்தான் செய்ய வேண்டும்.
ராஜ்மோகன்
உண்மைக்கு புறம்பாக பேசாமல் உண்மையை ரகுபது பேச வேண்டும். ஆக்கபூர்வமான விமர்சனங்களை வைத்தால் அதை ஏற்கும் வகையில்'தான் எங்கள் வெற்றி தலைவர் எங்களை வழிநடத்தி வருகிறார்.
என்.ஆனந்த்
வி.பி.ஜி ராம்ஜி திட்டத்தை திமுக எதிர்த்ததாக கூறுவது தவறு. திமுக ஆட்சியில் விபிஜி ராம்ஜி திட்டத்திற்கு 3000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
ரகுபதி
விடியல் பயணத்தை நீங்கள் எடுத்து விட்டீர்கள் பரவாயில்லை. ஆனால் தமிழ்நாட்டின் விடயமாக மீண்டும் எங்களது தலைவர் முதல்வராக வருவார்.
ஓட்டு போடும் நேரத்தில் சின்னப் பிள்ளைகள் குறுக்காலே பூர்ந்து விஜய்க்கு ஓட்டு போட செய்து விட்டார்கள். சின்னப் பிள்ளைகளுக்கு திட்டங்கள் ஒன்றும் தெரியாது...
நீங்கள் போடும் நிதி அரைகுறையாக தான் உள்ளது...
நிதியமைச்சர் மரிய வில்சன்
மகளிர் உரிமைத் தொகையை குறித்து பேசினால் எங்கள் தலைவர் பெயர்'தான் வரும் என்று ரகுபதி பேசுகிறார் ஆனால் ஒவ்வொரு குடிமகன் மீதும் ஒரு லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் கடனை வைத்து சென்றது திமுக தான். ரிலாகக்ஸாக இருங்கள். அப்படியே பேசினால் நீங்கள் கத்திக் கொண்டே இருக்க வேண்டியதுதான் நாங்கள் ஒன்றும் புதுசாக சொல்லவில்லை.

கே.என்.நேரு
நீங்கள் வந்த 60 நாட்களில் 20 ஆயிரம் கோடி கடன் வந்துள்ளது. 50 ஆண்டுகளுக்கு கடன் வாங்கித்தான் ஆக வேண்டும் என உங்களுடைய நிதி செயலாளரே சொல்லி உள்ளார். ரிசர்வ் வங்கியின் அனுமதி இல்லாமல் கடன் வாங்க முடியாது. எவ்வளவு கடன் என்று பார்க்காதீர்கள் எவ்வளவு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது என்பதை பாருங்கள்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved