Also Watch
Read this
By: Manigandan Raja

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வெள்ளி குறிச்சி கிராமத்தில் உள்ள வள்ளி தெய்வானை உடனான முருகன் கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு சுவாமிகளுக்கு பால் பன்னீர் சந்தனம் குங்குமம் திரவியம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனைகள் பூஜைகள் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டிய உலக நன்மைக்காகவும் பாதயாத்திரை திருப்பணி குழு தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் 751 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் வெள்ளிகுறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மகளிர்கள் கலந்து கொண்டனர். திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட மகளிர்களுக்கு குத்துவிளக்கு சேலை மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டன.
வெள்ளிக்குறிச்சி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved