news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

தமிழக எம்.பி.க்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை

19 எம்.பிக்கள் மட்டுமே பங்கேற்பு

10

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னையில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தில், தொகுதி மறுவரையறை மசோதா குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

மொத்தம் 57 எம்பிக்களில்...
முதலமைச்சர் விஜய் தலைமையிலான இந்த கூட்டத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விசிக, மதிமுக எம்பிக்கள் பங்கேற்றனர். தமிழகத்தைச் சேர்ந்த 57 எம்.பி.க்களில் 19 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.

திமுக கூட்டணியைச் சேர்ந்த தேமுதிக, மக்கள் நீதி மய்யமும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. முதலமைச்சர் தலைமையிலான எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று அதிமுக அறிவித்து உள்ளது. அதிமுக கூட்டணி கட்சியான பாமகவும் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

முதல்வர் விஜய் அழைப்பு
நாடாளு​மன்​றத்​தின் மழைக்​காலக் கூட்​டத்​தொடர் கடந்த ஜூலை 20ஆம் தேதி தொடங்கி நடை​பெற்று வரு​கிறது.

இதில் திருத்​தப்​பட்ட தொகுதி மறு​வரையறை மசோதாவை மீண்​டும் கொண்​டுவர மத்​திய அரசு முயற்சிப்​ப​தாக தகவல்​ வெளி​யாகி​யுள்ளது. இந்த​நிலை​யில், தொகுதி மறு​வரையறை பணி​கள் குறித்து விவா​திப்​ப​தற்​காக தமிழக எம்​.பி.க்​கள் ஆலோ​சனைக் கூட்​டத்​துக்கு முதலமைச்சர் விஜய் அழைப்பு விடுத்​திருந்தார்.

திமுக புறக்கணிப்பு
திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி, “யாரும் கேட்காமலேயே அவசர அவசரமாகத் தொகுதி மறுவரையறைக்கான கலந்தாய்வுக் கூட்டத்தை தவெக அரசு கூட்டியிருப்பது, காவிரி பிரச்சினையில் இருந்து மக்களை திசை திருப்பும் அரசியல் நாடகமேயன்றி வேறில்லை. இதில் திமுக பங்கேற்காது” என்று கூறி உள்ளார்.

அதிமுகவும் புறக்கணிப்பு
இந்த கூட்டத்தை அதிமுகவும் புறக்கணித்துள்ளது. "தொகுதி மறுவரையறை குறித்த புதிய மசோதா எதுவும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத, அதற்கான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லாத நிலையில், எதற்காக தமிழக முதல்வர் அவசர அவசரமாக எம்.பி.க்கள் கூட்டம் என்ற பெயரில் ஒரு நாடகத்தை அரங்கேற்றுகிறது? கண்முன்னே நடக்கும் காவிரி - மேகதாது பிரச்சினைக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கோரியுள்ள நிலையில், அவற்றை எல்லாம் உதாசீனப்படுத்தி விட்டு இந்த அரசின் முதல்வர், எதற்காக தாக்கல் செய்யப்படாத மசோதாவுக்கு கூட்டத்தை நடத்துகிறார்? இன்று வரை மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் இல்லை. விவசாயிகள் கண்ணீருக்கு பதில் சொல்லாமல் இந்த அரசு நடத்தும் மடைமாற்று அரசியல் அரங்கேற்றத்துக்கு அதிமுக ஒருபோதும் துணை போகாது," என்று அதிமுக தெரிவித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

புழல் ஏரிக்கு பெரும் ஆபத்து..!

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved