Also Watch
Read this

நடிகை சமந்தா தனது சமூக வலைதள பக்கத்தில் 'ஆகஸ்ட் எனர்ஜி' என்ற கேப்ஷனுடன், காருக்குள் அமர்ந்து அழுவது போன்ற ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. வீடியோவில், நடிகை சமந்தா அழுவது போல் காட்சி அளிப்பதால், இது ஆனந்த கண்ணீரா, அழுகையா அல்லது சிரிப்பா? என்று புரியாமல் ரசிகர்கள் திகைத்து உள்ளனர்.

சமந்தாவின் விளக்கம்
விசாகப்பட்டினத்தில் நடந்த தனது தயாரிப்பு திரைப்படமான 'சுபம்' பட விழாவில் மேடை விளக்குகளின் வெளிச்சம் காரணமாக தனது கண்கள் கூசி, கண்ணீர் வந்ததாகவும், தான் மிகவும் மகிழ்ச்சியாகவும் நலமாகவும் இருப்பதாகவும் நடிகை சமந்தா விளக்கம் அளித்துள்ளார். இதற்கு மேல் தவறான வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று, ரசிகர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ரூ.200 கோடி வசூலை கடந்த ஜனநாயகன்
முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ஜனநாயகனின் வசூல் இந்தியாவில் 200 கோடி ரூபாயை கடந்துள்ளது. சென்சார் பிரச்சனையால் பெரும் போராட்டத்துக்கு பின் கடந்த ஜூலை 23ஆம் தேதி ஜனநாயகன் திரைப்படம் ரிலீஸானது. முதல் வாரத்தில் 178 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு மேல் வசூலித்த திரைப்படம், இரண்டாவது வாரத்தில் 36 கோடியே 75 லட்சம் ரூபாயை வசூலித்துள்ளது. முதல் வார வசூலை ஒப்பிடுகையில், இரண்டாவது வாரத்தில் வசூல் 90 சதவீதம் சரிந்துள்ளது.

'தளபதி கச்சேரி' பாடல் வெளியானது
ஹெச்.வினோத் இயக்கத்தில் முதல்வர் விஜய் நடிப்பில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஜனநாயகன் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள 'தளபதி கச்சேரி' பாடல் யூடியூபில் வெளியானது. அனிருத்தின் துள்ளலான இசைக்கும், விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜுவின் அசத்தல் நடனத்துக்கும் ரசிகர்கள் லைக்ஸ் மழை பொழிந்து வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved