Also Watch
Read this

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ரசிகர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மைதானங்களில் ரசிகர்களின் வருகையை அதிகரித்து, கிரிக்கெட் உற்சாகத்தை உயர்த்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 15ஆம் தேதி காலே நகரில் தொடங்குகிறது.

முன்னாள் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் கருத்து
ஹர்திக் பாண்ட்யாவை ட்ரேட் மூலம் கொல்கத்தா அணிக்கு அனுப்ப வேண்டுமெனில், பதிலுக்கு ரிங்கு சிங் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகிய இருவரையும் மும்பை இந்தியன்ஸ் கேட்கும் என முன்னாள் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் கருத்து தெரிவித்துள்ளார். ஐபிஎல் அணிகள் இடையேயான வீரர் பரிமாற்றம் குறித்து பரபரப்பு நிலவி வரும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்ட்யாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அல்லது கொல்கத்தா அணிகளுடன் பரிமாற்றம் செய்ய ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வழக்குகளை எதிர்கொள்ளத் தயார்-ஷாகிப்
வங்கதேச கிரிக்கெட் ஆல்-ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன், அரசாங்கம் தனது பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்தால் நாடு திரும்பி, தன்மீது உள்ள அனைத்து வழக்குகளையும் சட்டப்படி எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக தெரிவித்து உள்ளார். மேலும், வங்கதேச அணிக்காக கடைசி தொடரில் விளையாடவும், 2027 உலகக் கோப்பையிலும் இடம்பிடிக்க வேண்டும் என்பதே தனது இலக்கு என்றும் அவர் கூறியுள்ளார். ஹசீனாவின் அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஷகிப், 2024 ஆகஸ்டில் மாணவர்கள் எழுச்சியின் மூலம் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டதிலிருந்து அமெரிக்காவில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சச்சின் தான் Greatest Indian Cricketer Of All Time
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அஜிங்க்யா ரஹானே, சச்சின் டெண்டுல்கர் தான் Greatest Indian Cricketer Of All Time என்று தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டியில் பேசிய ரஹானே, பல தலைமுறைகளையும் கடந்து சிறந்த வீரராக சச்சின் திகழ்வதாக பாராட்டு தெரிவித்து உள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் உள்ளிட்ட பல சாதனைகளை படைத்துள்ள சச்சின், இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய அடையாளங்களில் ஒருவராக உள்ளதாக நெகிழ்ச்சி தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved