news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews
tv

Also Watch

திரைப்பட நிகழ்ச்சி சர்ச்சை - நயன்தாரா விளக்கம்

TOXIC

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Nayanthara

பக்குவம் இல்லாததால் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்பதில்லை 

நடிகை நயன்தாரா சினிமா நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்துகொள்வதில்லை என எழுந்த விமர்சனத்துக்கு TOXIC திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நயன்தாரா விளக்கமளித்துள்ளார்.

சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பிக்கும் அளவுக்கு பக்குவம் இல்லாததால் மட்டுமே தவிர்ப்பதாகவும், மற்றபடி காரணம் எதுவும் இல்லை எனவும் அவர் கூறினார். யாஷ் அழைப்பு விடுத்ததன் காரணமாகவே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக நயன்தாரா கூறினார்.

DC திரைப்படத்தில் நடிக்க மறுத்த விஜய் தேவரகொண்டா? 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் DC திரைப்படத்தின் கதையை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் முதலில் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவிடம் தெரிவித்ததாகவும், கதையை கேட்ட அவர் நடிக்க மறுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கதை பிடித்திருந்தும், முன்னதாக தான் நடித்திருந்த KINGDOM திரைப்படத்தின் சாயலில் DC திரைப்படத்தின் கதை இருந்ததால், விஜய் தேவரகொண்டா மறுத்ததாக கூறப்படுகிறது.

'மீசைய முறுக்கு 2' கொண்டாட்ட நிகழ்ச்சி ரத்து 

சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் மாலில் 'மீசைய முறுக்கு 2' கொண்டாட்ட நிகழ்ச்சியில் ரசிகர்களின் கட்டுக் கடங்காத கூட்டம் காரணமாக நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட நிலையில், ரசிகர்களுக்கு வருத்தம் தெரிவித்து நடிகர் ஹிப் ஹாப் ஆதி வீடியோ வெளியிட்டுள்ளார்.

ரசிகர்களின் கூட்டம் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், நிகழ்ச்சியை ரத்து செய்ய போலீசார் அறிவுறுத்தினர்.

Related Link
துரந்தர் முதல் பாகம் - நெட்பிளிக்ஸில் புதிய சாதனை

துரந்தர் முதல் பாகம் - நெட்பிளிக்ஸில் புதிய சாதனை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஒன்றிணைகிறதா தேசியவாத காங்கிரஸ் பிரிவுகள்?

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved