Also Watch
Read this
By: Manigandan Raja

ஓணம் பண்டிகைக்காக 112 சிறப்பு ரயில்கள்
ஓணம் பண்டிக்காக கேரளாவிற்கு 112 சிறப்பு ரயில் சேவைகளை இயக்குவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி ஆகஸ்டு 14 ஆம் தேதி முதல் செப்டம்பர் 6 ஆம் தேதி வரை நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து கேரளாவிற்கு சிறப்பு ரயில்கள் இயக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்டா நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு
மெட்டா நிறுவனம் மன்னிப்பு கோரியதைத் தொடர்ந்து, மெட்டா நிறுவனம் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் விதிமுறைகளைப் பின்பற்றுகிறதா என்பதை அரசு தற்போது தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.

ஒருவேளை வெளியீட்டாளராகக் கருதப்பட்டால், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் இதுவரை கிடைத்து வந்த சட்டப் பாதுகாப்பை மெட்டா இழக்க நேரிடும் என கூறப்படுகிறது.
இளைஞர்களின் தரவுகள் பெரு நிறுவனங்களிடம் ஒப்படைப்பு
இளைஞர்களின் தரவுகள், ஜியோ, அதானி, கூகுள் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்ற இளைஞர்களின் குரல் நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவின் மிகப்பெரிய பலம் இளைஞர்கள்தான் என்றும், அவர்களின் ஆற்றலும் தரவுகளும் நாட்டின் எதிர்காலத்திற்கு முக்கியம் என்றும் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved